செய்திகள்

தங்கம் விலை 2 நாளில் ரூ.1,064 சரிவு: இன்று சவரன் ரூ.37,376 க்கு விற்பனை

சென்னை, ஜூலை 7–

தங்கம் விலை இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.544 சரிந்து ரூ.37,376 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில், சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ.544 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து, ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை நேற்று ரூ. 520 குறைந்த நிலையில், இன்று ரூ.544 குறைந்ததால் 2 நாளில் சவரனுக்கு ரூ.1,064 சரிவை கண்டுள்ளது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.62.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.