சென்னை, ஜூலை 30–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தொடா்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது நேற்று ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 51,320-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.6,385-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 51,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ.500 குறைந்து ரூ. 89,000க்கும் விற்பனையாகிறது.