சென்னை, ஜூன் 15–
தங்கத்தின் விலை இன்று ரூ.200 குறைந்து ரூ.37,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.
சவரனுக்கு ரூ.200 குறைவு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, சவரன் 37,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 4,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66 க்கும் ஒரு கிலோ ரூ.66,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.