செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

Makkal Kural Official

சென்னை, ஆக. 27– 

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 8–ந்தேதி

புதிய உச்சமாக சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 9–ந்தேதியிலிருந்து சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே விலை இருந்தது. நேற்று முன்தினம் ஒரு சவரன் 74,440 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,355 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 74,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை கடந்தது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.130க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *