சென்னை, ஏப்.10–
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6705 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.53,640க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.6705க்கும், ஒரு சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.53,640க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.89க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கிவருவதால் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர். ஏற்கெனவே 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.7000ஐ கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2022 டிசம்பர் 26ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,040-க்கு விற்கப்பட்டது. இது அப்போது அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. ஆனால் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
கடந்த 2023 பிப்ரவரியில் ஒரு சவரன் ரூ.44 ஆயிரம், மார்ச் மாதம் ரூ.45 ஆயிரம், ஜூன் மாதம் ரூ.46 ஆயிரம், டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரம் என விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
2024-ல் தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சவரன் ரூ.48 ஆயிரமும், மார்ச் 9ம் தேதி ரூ.49 ஆயிரமும், மார்ச் 28ம் தேதி ரூ.50 ஆயிரம், 29ம் தேதி ரூ.51 ஆயிரம், கடந்த 3ம் தேதி ரூ.52 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டியது. ஏப்ரல் 8 ம் தேதி ஒரு கிராம் ரூ.6,660-க்கும், ஒரு பவுன் ரூ.53,280-க்கும் விற்பனையானது.