சென்னை, ஜூலை 12–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனையாகிறது.வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு கிலோ ரூ. 1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
#தங்க நகை