சென்னை, ஏப். 13–
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை கடந்தது. மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.89,000-க்கு விற்பனையாகிறது.