சென்னை, ஆக. 10–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 3வது நாளாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீது வரி குறைக்கப்பட்ட நிலையில் தங்கம் விலையானது கணிசமான அளவில் குறைந்தது. தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.600 உயந்து ரூ. 51,400-க்கும் விற்பனையானது.
3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 51,560க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.88.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.88,100-க்கும் விற்பனையாகிறது.