சென்னை, மார்ச் 1–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்காளக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில், கடந்த 25–ந்தேதி புதிய உச்சத்தைத் தொட்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து இரு நாட்களில் ரூ. 520 குறைந்து நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ. 64,080-க்கு விற்பனையானது.
நேற்றும் அதிரடியாக ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 63,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.7,960-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்தது. அந்த வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 63,520-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 7,940-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து 2-வது நாளாக எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ. 105க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.