சென்னை, ஜூலை 2–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1200 அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டு செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.9,020க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மேலும் உயர்வை கண்டுள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![]()





