செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, பிப்.26–

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது.

அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *