சென்னை, நவ. 29–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.1,760 வரை குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.