சென்னை, ஏப். 8–
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது பெண்கள் மத்தியில் ஆறுதலை தந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சவரனுக்கு ஏப்ரல் 4ம் தேதி ரூ.1,280 மற்றும் 5ம் தேதி ரூ.720 குறைந்தது. 6–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றும் இல்லாமல் விற்பனையானது. நேற்று (7ம் தேதி) சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,225-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.