சென்னை, நவ. 7–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. க
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையானது. வா்த்தகம் நிறைவடையும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,320-க்கும், சவரனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,560-க்கும் விற்பனையானது. இதன்மூலம், ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ.1,120 உயா்ந்தது.
இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
![]()





