செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை, நவ.30–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.5,868–-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *