சென்னை, அக். 28
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது. இது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வாரத் தொடக்க நாளான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.