செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 6–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை ஆகிறது.

கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12,020 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து 96,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.199க்கு விற்பனை ஆகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *