செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது

சென்னை, நவ. 28–

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.4,921-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *