செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு; கடந்த 7 நாட்களில் ரூ. 1,400 அதிகரிப்பு

சென்னை, ஜூலை 29–

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. அதுமுதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21 ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630 க்கும், சவரன் ரூ.37,040 க்கும் விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து, ரூ.1400 வரையில் உயர்ந்து சவரன் ரூ.38,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.304 உயர்வு

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,805 க்கும், சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. கடந்த 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 61.20 ரூபாயாக இருந்தது. இன்று ரூ.1.10 உயர்ந்து அது ரூ.62.30 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 62,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.