சென்னை, மார்ச் 6:
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் வந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.