சென்னை, மார்ச் 18–
தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து, ரூ.50 ஆயிரத்தை தொடும் வகையில் இருந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.80,000க்கு விற்பனையாகிறது.