சென்னை, ஆக. 28–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 53,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்கப்பட்ட அன்றே தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2,000 குறைந்தது. அதனைத் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர், தங்கத்தின் விலை சில நாட்கள் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது.
இதனிடையே கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 53,560 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 53,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ரூ 93.50-க்கு விற்பனையாகிறது.