சென்னை, ஆக. 8–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அவ்வப்போது சற்று குறைவதும், அதிரடியாக விலை உயர்வதுமாக விற்பனையாகி வந்தது. ஒரு சவரன் 55 ஆயிரத்தை தொட்டது. கடந்த மாதம் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலை சரிந்தது.
இந்த வார தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ரூ.1,120 குறைந்தது.
ஆனால் இன்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.50,640க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,800க்கு, ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.86.50-க்கும், ஒரு கிலோ ரூ. 86,500க்கும் விற்பனையாகி வருகின்றது.