செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

Makkal Kural Official

சென்னை, மார்ச் 24–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிக அளவில் உயர்ந்தும், சிறிய அளவில் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் தங்கம் அதிகபட்சமாக சவரன் ரூ.66,480-க்கு விற்கப்பட்டது.

21ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.66,160க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ரூ. 65,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் வார துவக்க நாளான இன்று (மார்ச் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,215க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சற்று விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 110-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *