சென்னை, நவ. 5–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, சவரன் ரூ.38,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். பொதுவாக இந்திய மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை உயர்வு
அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை, ரூ.1.90 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.1900 உயர்ந்து, ரூ.66,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.