செய்திகள்

தங்கம் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியது

Makkal Kural Official

சென்னை, மார்ச் 18–

தங்கம் விலை ஒரு சவரன் இன்று மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31ம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1–ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது.

பிப்ரவரி 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

கடந்த 14–ந்தேதி காலை தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. அன்று பிற்பகலில் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போது இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. வார இறுதி நாளான 15–ந்தேதி ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 65,680-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ.66,000-ஐ எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 8,250-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனை ஆகிறது.தங்கத்தின் விலை வரலாற்றில் முதல்முறையாக ரூ. 66,000-ஐ தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதேபோல், வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 113-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *