சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில், சனிக்கிழமையான இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.6,770 ஆகவும் உள்ளது.
பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.87,500-க்கும் விற்பனையாகிறது