சென்னை, ஜூலை 23–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து 2வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து, கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.55,000ஐ கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. ஆனால் வார இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 6,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.95.60க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.