செய்திகள் வர்த்தகம்

தங்கம் விலை இன்று ரூ.40,000 தாண்டியது

சென்னை, ஏப். 14–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி ரூ.40,048 க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் முதல் வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி, இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதன்பிறகு தங்கம் விலை குறைந்தது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது.

ரூ. 40,048-க்கு விற்பனை

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தும் வரும் தங்கம் இன்றும் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்தது. தொடர்ந்து இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி ரூ. 40,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று, சென்னையில்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ரூ.5,006-க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 1, 500 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 74 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.