சென்னை, ஜன. 30–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது.
தங்கம், வெள்ளி உயர்வு
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1,06,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.