செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.448 உயர்வு

சென்னை, மே 5–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.488 அதிகரித்து, ரூ.38,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக குறைந்து காணப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சவரனுக்கு ரூ.448 உயர்வு

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.448 அதிகரித்து, ரூ.38,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.54 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து, ரூ.68.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து, கிலோ ரூ.68,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.