செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைவு

Makkal Kural Official

சென்னை, மே 12–

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1320 குறைந்த நிலையில், மீண்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,000-க்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

சவரனுக்கு ரூ.1320 குறைவு

இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. இந்த நிலையில் தான் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (மே 10) ஒரு கிராம் தங்கம் ரூ.9045 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,360 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு அதிரடியாக ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880 க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *