செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 சரிவு

Makkal Kural Official

சென்னை, ஜன. 4–

கடந்த 3 தினங்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று ( ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 சரிந்தது. ஒரு சவரன் ரூ.57,720க்கும், ஒரு கிராம் ரூ.7,215க்கும் விற்பனை செய்யபடுகிறது.

சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது.

2–ந் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.7,180க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராமுக்கு, 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 சரிந்தது. ஒரு சவரன் ரூ.57, 720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.7,215க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 99-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *