சென்னை, ஜன. 4–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.49,960க்கு விற்பனையானது
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.78க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2000 குறைந்து ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.