சென்னை, ஜூன் 23–
தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறுைந்து 43,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக தங்கம் மாறியுள்ளது. அதனால், மக்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் அண்மை காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
சவரனுக்கு ரூ.320 குறைவு
அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5485 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 43,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5445 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் குறைந்து 43,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் நேற்று கிலோவுக்கு ரூ.1500 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.1000 குறைந்துள்ளது. அந்த வகையில், வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ஒன்று 74 ரூபாயாகவும் ஒரு கிலோ 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.