சென்னை, மார்ச் 21–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.49,880-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மார்ச் 20 ஆம் தேதி ஒரு கிராம் ரூ. 6,140 க்கும், ஒரு சவரன் ரூ.49,120 க்கும் விற்பனையானது.
சவரனுக்கு ரூ.760 உயர்வு
இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன்படி, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,880-க்கும், கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,235-க்கும் விற்பனையாகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளதும், விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,000 கடந்துவிடும் என்றும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.81.50-க்கும், ஒரு கிலோ ரூ. 81,500-க்கும் விற்பனையாகிறது.