சென்னை, டிச. 14–
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.680 அதிகரித்து ரூ.40,800க்கு விற்பனையானது.
தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.5,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 74 ஆயிரம் ஆகும்.
தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்வது, சர்வதேச சந்தை சூழல் சாதகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.