செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது

Makkal Kural Official

சென்னை, நவ.1–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. ரூ.57 ஆயிரத்தை தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது. கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640-க்கும் கிராமுக்கு ரூ.7,455-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நவம்பர் மாத தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ. 7,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *