சென்னை, அக். 25–
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று ஒரு சவரன் ரூ.58,720-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.7285 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58.280க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்து கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.