சென்னை, டிச. 21–
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.400 உயர்ந்து ரூ. 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 40,520-க்கு விற்பனையானது.
தங்கம் ரூ.400 உயர்வு
இந்நிலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40,920 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலமாக 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,115 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, வெள்ளி விலையும் இன்று கடுமையாக அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.20 அதிகரித்து ரூ.74.70–க்கு விற்பனை செய்யப்படுகிறது.