சென்னை, டிச.2–
தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![]()





