சென்னை, அக். 9–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.
இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் தங்கம் வாங்குவது ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
கடந்த மாதம் 8ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று நேற்று காலை ரூ.100 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 300க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
அடுத்து 2வது முறையாக மதியம் தங்கம் விலை உயர்ந்தது. மேலும் ரூ.85 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 385க்கும், ரூ.680 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.31 ஆயிரம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தங்கம் விலை ஜெட் வேகத்தில் செல்வதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.171க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





