சென்னை, மே 3–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை கிடுகிடு என உயருவதும், பிறகு சற்று குறைவதுமான நிலை கடந்த மாதங்களில் நடந்தது. இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்தபடியேதான் காணப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.87,000க்கு விற்கப்படுகிறது.