செய்திகள்

தங்கத்தின் விலை ரூ.560 உயர்வு: சவரன் ரூ.57,000 ஐ நெருங்கியது

Makkal Kural Official

சென்னை, அக். 11–

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,960 க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிப்பு, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது.

கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4 ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையும் புதிய உச்சமாக கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது.

ரூ.560 அதிகரிப்பு

அதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் 7,095 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,02,000 க்கும் விற்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *