2 நாளில் அதிரடியாக ரூ.680 குறைந்தது
சென்னை, ஜூன் 15–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அண்மையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ரூ.680 வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.360 குறைவு
அதன்படி, நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் கிராமுக்கு ரூ.5,550 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.5505 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,400 இல் இருந்து ரூ.360 குறைந்து ரூ.44,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று 78.50 காசாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78,500 ஆகவும் இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, கிராம் ரூ77.50 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.