சென்னை, மே 20–
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்து, சவரன் ரூ.45,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.45,360-க்கும், ஒரு கிராம் ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.2000 நோட்டு காரணமா?
வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 79-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று மாலையில் திடீரென 2000 ரூபாய் நோட்டின் மதிப்பை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, அந்த நோட்டுகளை கொடுத்து அதிக அளவில் தங்கம் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்போதும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறவிப்பால் தங்கம் விலை திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.