செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை, அக். 30–

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.5,770-க்கும், ஒரு சவரன் ரூ.46,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் பவுன் ரூ.280 குறைவு

இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *