செய்திகள் போஸ்டர் செய்தி

தங்கத்தின் விலை உச்சத்தில் சென்றது அச்சத்தில் பெண்களைப் பெற்றோர்

முதலீட்டாளர்கள் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு மற்ற முதலீடுகளை விட பாதுகாப்பு என்பதற்காக தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்வதைப் பயன் படுத்திக் கொண்டு தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று மதுரை மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தங்கம் விலை உயர்வதற்கும் வீழ்ச்சியடைவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் ஐந்து முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

சர்வதேசப் பொருளாதார நிலை, சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகளும் தங்கத்துக்கான தேவையும் ஆகும். சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும்போது தங்கம் விலை உயரத் தொடங்கும். முதலீட்டாளர்கள் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு மற்ற முதலீடுகளை விட தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

ஜனவரி 1ஆம் தேதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,517 டாலராக இருந்த நிலையில் இன்று அதன் விலை 1,1735 டாலரைத் தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாக இருப்பதால் அதன் விலையும் உச்சத்திலேயே இருக்கிறது. அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. ஏனெனில், டாலர் மதிப்பில் தான் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால் அதிக ரூபாய் கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் தங்கத்தின் விலை உயர்த்தப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைவாக இருந்தாலும் இறக்குமதிச் செலவுகளை ஈடுசெய்ய தங்கத்தின் விலையை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயரும்போது இந்தியாவிலும் தங்கத்தின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரம் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்து டாலர் விலை அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் மீதான விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

எனவே இந்த அனைத்து காரணிகளையும் வைத்துத்தான் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் தங்கம் விற்பனை முடங்கிவிட்டாலும் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை உயரத்தான் செய்யும். தங்கத்தின் விலையை ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் எப்படி உயர்ந்திருக்கிறது என்பதை கீழே கொடுத்திருக்கும் உண்மையான விலைகளை பற்றி அறிந்து கொள்வோம் .

நிச்சயமாக நாம் இப்பொழுது நினைப்பது அந்த காலத்திலேயே நாம் தங்கம் வாங்காமல்போனோமே என்று எண்ணத் தோன்றும் , ஆனால் இந்த எண்ணம் இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் மக்கள் இது போல வே எண்ணுவார்கள் . தங்கத்திற்கு மாற்றாக ஒரு உலோகம் கண்டுபிடிக்கும்வரை இது போன்று உயர உயரத்தான் பறக்கும் தங்கத்தின் விலை.

வருடம் சவரன் விலை

1950 – ரூ.. 99

1955 – ரூ.. 79

1960 – ரூ.. 111

1965 – ரூ.. 71

1970 – ரூ.. 184

1975 – ரூ.. 520

1985 – ரூ..2000

1980 – ரூ..1300

1990 – ரூ..3200

1995 – ரூ..4650

2000 – ரூ..4400

2005 – ரூ..7000

2010 – ரூ..18000

2015 – ரூ..26,343.50

2020 – ரூ..43,430

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *