சென்னை, செப். 30–
வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42,880 க்கு விற்பனை ஆகிறது.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ. 5,545-க்கும், பவுனுக்கு ரூ.44,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் மாதத்தின் இறுதி நாள்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
10 நாளில் ரூ.1520 குறைவு
அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5360-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கும் விற்பனையாகிறது. கடந்த பத்து நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.50 குறைந்து ரூ. 76-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,500 குறைந்து ரூ.76,000-க்கும் விற்பனையாகிறது.