பவுன் ரூ.42.840 க்கு விற்பனை
சென்னை, ஜன. 24–
தங்கம் விலை இன்றும் இரண்டாவது நாளாக ரூ.256 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அண்மை காலமாக, தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,355 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 5,323 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சவரனுக்கு ரூ.256 உயர்வு
அதேபோல, நேற்று 42,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 256 ரூபாய் உயர்ந்து 42,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆறுதல் தரும் விதமாக வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.74.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.74 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.